கம்மங்கூழ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

தமிழனின் பாரம்பரிய உணவுகளுள் ஒன்று தான் கம்மங்கூழ். 10 வருடங்களுக்கு முன்பு வரை கம்மங்கூழ் அனைவரது வீட்டிலும் சாதாரணமாக தயாரித்து குடித்து வந்தோம். ஆனால் தற்போது இந்த கம்மங்கூழ் அரிய பானமாக தள்ளுவண்டியில் விற்கப்பட்டு வருகிறது. இன்று வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. கோடைக்காலம் வேறு ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் பலர் அதிக வெப்பத்தால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும். குறிப்பாக நிறைய பேர் உடல் சூட்டினால் கஷ்டப்படுவார்கள். இந்த உடல் சூட்டைத் தணிப்பதற்கு ஏராளமான பானங்கள், மருந்துகள் போன்றவை விற்கப்படுகின்றன. முந்தைய காலத்தில் எல்லாம் நிறைய பானங்கள், மருந்துகள் எல்லாம் இல்லை. நம் முன்னோர்கள் வெயிலால் ஏற்படும் தாக்கத்தைத் தணிப்பதற்கு பழங்காலம் முதலாக கம்மங்கூழைத் தான் குடித்து வந்தார்கள்.

தானிய வகைகளுள் ஒன்றான் கம்புவில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அதில் 15% புரோட்டீன் மற்றும் அதிகளவு நார்ச்சத்து, வைட்டமின் ஈ, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், நியாசின், தையமின், ரிபோஃப்ளேவின் போன்றவை குறிப்பிடத்தக்கவை. அதோடு அத்தியாவசியமான அமினோ அமிலங்களான மெத்தியோனைன் மற்றும் லிசித்தின், கனிமச்சத்துக்களான இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்றவகளும் அடங்கியுள்ளன. இப்போது கம்மங்கூழ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் காலையில் கண்ட உணவுகளை உட்கொள்ளாமல், கம்மங்கூழைத் தயாரித்துக் குடியுங்கள். முக்கியமாக கம்மங்கூழ் தயாரிப்பது மிகவும் எளிமையானது. அதுவும் இரவில் தயாரித்து, மறுநாள் காலையில் குடிக்க வேண்டிய பானம் என்பதால், இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ற அற்புதமான காலை உணவாகவும் இருக்கும்.

வெயில் காலத்தில் உடல் சூட்டால் நிறைய பேர் கஷ்டப்படுவார்கள். இந்த உடல் சூட்டைத் தணிப்பதற்கு இளநீருக்கு அடுத்தப்படியாக சிறந்த பானம் என்றால் அது கம்மங்கூழ் தான். ஒருவர் கம்மங்கூழை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், உடலின் வெப்பநிலை அளவுக்கு அதிகமாகாமல் சீராக பராமரிக்கப்படும். அதோடு கம்மங்கூழ் உடலுக்கு உடனடி ஆற்றலையும் வழங்கும்.

Read more

பழைய சாதம் சாப்பிடுபவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள்!

அக்காலத்தில் காலை உணவாக பெரும்பாலும் பழைய சோற்றைத் தான் சாப்பிட்டார்கள். அத்தகைய பழைய சோற்றை சமீபத்தில் அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் மூலம் கிடைத்த முடிவுகளைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். ஏனெனில் பழைய சோற்றில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளதாகவும், அதனை உட்கொண்டால் கிடைக்கும் நன்மைகளையும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

ஆனால் இக்காலத்தில் அந்த பழைய சோறு என்னும் கஞ்சி சாப்பிடுவதற்கு வழியே இல்லை. ஆம், தற்போது பெரும்பாலானோரின் வீடுகளில் இரவில் கூட டிபன் தான் சமைக்கப்படுகிறது. அப்படி இருக்க, எப்படி பழைய சோற்றினை சாப்பிட முடியும். அதுமட்டுமின்றி, பலரது வீடுகளில் காலையில் பழைய சோற்றுக்கு மாற்றாக இட்லி, தோசை, பூரி, சப்பாதி, நூடுல்ஸ் போன்றவை வந்துவிட்டதால், பழைய சோற்றினை மறந்துவிட்டோம். காலை உணவை ஏன் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று தெரியுமா…? இங்கு அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் தங்களின் ஆய்வில் கண்டறிந்தவைகளையும், பழைய சோற்றினை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளையும் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பழைய சோற்றில் மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத வைட்டமின் பி6, பி12 போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

பழைய சோற்றில் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் உள்ளதால், அவற்றை உட்கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனைகள் நீங்கி, செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.

பழைய சோற்றில் நோயெதிர்ப்பிற்கான காரணிகள் அதிகம் உள்ளது. இவற்றை உட்கொள்ளும் போது, அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள், உடல் உள்ளுறுப்புக்களை பாதுகாப்பதோடு, உடலைத் தாக்கும் நோய் கிருமிகளை எதிர்க்கும் வகையில் எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்கின்றன. இதனால் உடலில் அடிக்கடி ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்

தினமும் காலையில் பழைய சோற்றினை சாப்பிட்டு வந்தால், விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கலாம். நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க விரும்பினால், பழைய சோற்றினை காலை உணவாக உட்கொண்டு வாருங்கள்.

Read more

ராகி சாப்பிடுபவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள்!

நம்முடைய பாரம்பரிய விவசாயத்தில் பயிர் செய்து விளைவித்த சோளம், கேழ்வரகு, கம்பு, வரகு, தினை, சாமை, குதிரைவாலி போன்ற பயிர்களை நாகரீகமற்ற உணவுகள் என்று நாம் தூக்கிப் போட்டுவிட்டு பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா என களமிறங்கியதும் சர்க்கரை நோய் முதல் மாரடைப்பு வரை நம்மை நோக்கிப் பாயத் தொடங்கிவிட்டன. எனனதான் மருந்துகள் சாப்பிட்டாலும் உணவு முறையால் மட்டும் தான் நிரந்தரமான தீர்வைக் காணமுடியும் என்று உணர்ந்து கொண்டபின், இப்போது தான் நம் பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்பியிருக்கிறோம். நாம் திரும்பிப் பார்க்கும்போது நம்முடைய வயல்களில் சிறுதானியங்கள் பயிரிடப்படுவதில்லை. ஏன் நாம் சிறு தானியங்கள் விளைவித்த பல நிலங்கள் இன்று கட்டடங்களாக மாறிவிட்டன. நம் வீட்டில்இருநு்த தானியங்களை இப்போது சூப்பர் மார்க்கெட்டுகளில் அதிக விலை கொடுத்து வாங்கி, மில்லட்ஸ் என்று கௌரவமாக சாப்பிடுகிறோம்.

சரி. அந்த கதையெல்லாம் விட்டுவிட்டு சிறு தானியங்களில் மிக முக்கியமான பயிரான ராகி எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் கொண்டது. அது உடலுக்கு எவ்வளவு நன்மையைத் தரக்கூடியது என்று இப்போது பார்க்கலாம்.

சிறு தானியங்களில் முதன்மை பெற்றிருக்கிற ஒன்று தான் ராகி. ஆனால் ராகியை நிறைய பேருக்குப் பிடிக்காது. ஏனென்றால் அது அவ்வளவு சுவை மிக்கது அல்ல. அதிலும் குறிப்பாக, நம்முடைய முன்னோர்களின் சமையல் முறைப்படி பார்த்தால், அவர்கள் செய்யும் ராகி களியை நம்மால் சாப்பிடவே முடியாது. அதை கடித்தோ மென்றோ சாப்பிட முடியாது. விழுங்கதான் வேண்டும். இதனாலேயே பலருக்கும் ராகி களியைப் பிடிக்காது.

ராகியில் அதிக அளவில் கால்சியம் இருப்பதால், எலும்பு, பற்கள் என அத்தனைக்கும் நல்லது. குறிப்பாக, கோடை காலத்தில் இதை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இது உடல் சூட்டைத் தணித்து, உங்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். கோடையில் உடலின் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், இக்காலத்தில் ராகியை உணவில் சேர்த்து வந்தால், உடல் வெப்பமானது குறையும்.

Read more

Fermented Rice Benefits

In recent times, the West has started acknowledging and even discovering the varied health benefits of different foods and spices from the Indian sub-continent. To give a few examples: Turmeric milk (popular among Indians as haldi doodh) was christened as turmeric smoothie by the Americans, then came the craze of using coconut oil (again, nothing new as it’s commonly in South India for cooking). And, they are slowly moving on to another common food practice in India: Fermented rice gruel. American Nutrition Association says that the previous day’s soaked rice is the best for breakfast.

A common practice is cooking rice in the afternoon (excess water is drained). Once the rice cools down to room temperature, it is again soaked in water and stored in an earthen clay pot. This is left overnight at room temperature. By next morning, you would have the fermented rice, which is eaten for breakfast. Traditionally, it is eaten with a side dish, raw onion or green chilli. Some prefer to drain excess water and eat it with yoghurt and a slight sprinkle of salt. American Nutrition Association has also admitted to its various health benefits. Here are some of them:

  • More nutrients compared to normal rice: Yes it might come as a surprise, but it is said that the fermentation process increases the nutritional value of rice. Like, for instance, soaking rice overnight for around 12 hours increases the iron content by 21 times compared to regular cooked rice, states spoonuniversity.com. For example, after 12 hours of fermentation of 100 grams of rice, the availability of iron changed from 3.4 mg to 73.91mg (an increase of 2073%).
  • Good for various health problems: According to a report in Deccan Chronicle, fermented brown rice produces vitamin B12, which helps prevent fatigue. Fermented rice water concoction is also given to the sick as it aids speedy recovery due to its nutritional value. The vitamin B present in fermented rice can also cure ulcers. During the fermentation process, several micro-organisms are produced. These micro-organisms, in turn, balance the PH level in the stomach and boost good gut bacteria.

The healthy bacteria helps bowel movement and since it also acts as a natural laxative, it is good for those suffering from constipation. The potassium

Health Benefits of Pearl Millet

Millets are a great source of starch, making it a high-energy food. It is also an excellent source of protein and fiber. It is said that the amino acids in the pearl millet are more easily digestible than the ones found in wheat.

Due to essential nutrients such as methionine (an amino acid), B complex vitamins (niacin, thiamin, and riboflavin), folic acid, lecithin, potassium, magnesium, manganese and zinc, millets are very effective in several roles. Niacin reduces cholesterol while magnesium is essential for maintaining good heart health, as it lowers blood pressure and reduces the risk of heart attacks.

Pearl millet is a rich source of phosphorus, which plays an important part in the structure of body cells. Phosphorus, found in pearl millets, is a significant component of several necessary compounds including adenosine triphosphate (ATP). This element is also a crucial component of nucleic acids, which are the building blocks of the genetic code. Phosphorus is a constituent of lipid-containing structures such as cell membranes and nervous system structures.

Recent studies have proven that regular consumption of pearl millets help in preventing gallstones in women. They contain insoluble fibers which not only speed up intestinal transit time but also reduce the secretion of bile acids. Pearl millets are known to increase insulin sensitivity and lower the level of triglycerides.

Regular intake of millets provides protection against breast cancer in pre-menopausal women. Apart from that, it has also shown a considerable reduction in the occurrence of wheezing and asthma in children.

Millets contain an essential phytonutrient, lignin, which is very beneficial for the human body. With the help of natural flora, lignans get converted to mammalian lignans and they fight against hormone-dependent cancers and reduce the risk of cardiac arrests.

Consumption of pearl millets helps in minimizing the risk of type 2 diabetes. Being a good source of magnesium, millets act as a cofactor in a number of enzymatic reactions.

Health Benefits of Ragi

Prior to the 1950s, whole grains like ragi, brown rice and barley were organically grown and considered a traditional diet until rice became India’s staple food. With the dawn of Information and Technology (IT), most individuals do stick to a planned diet thus making them prone to eating instant food. As a result, they develop heart diseases and cancerous tumours in their body.

Doctors suggest diabetic patients and normal people to consume ragi to avoid such diseases. This cereal has become absent for most teenagers. However, this article is focused on the benefits and wonders that ragi can offer in the long run.

  1. High Protein:
Eleusinian is the major protein content that is found in ragi and has a lot of biological value. This protein helps prevent malnutrition and is considered to be a healthy source of protein for vegetarians. Methionine content constitutes 5 per cent of the total protein found in ragi. Ragi has been grown for hundreds of years and it can grow in high altitudes and withstand harsh weather conditions. Ragi has a lot of carbohydrates and is placed at the peak of food grains by most dietitians. Ragi cannot be polished like other grains because it is too tiny and this makes it possible for us to consume it in its purest form.
  1. Natural Weight Loss Agent:
Ragi has high amounts of fibre in it that keeps your stomach full and stops you from unwanted cravings. This helps in weight loss. It reduces the level of blood sugar in your body and turns it into insulin. Ragi is best suited when you consume it in the morning. Ragi contains a type of amino acid called Tryptophan that helps you lose weight. Tryptophan reduces your appetite and thus you don’t feel hungry often.
Read more

SIDE DISH - Veg or Non Veg